கவின் - நயன்தாரா படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

கவின் - நயன்தாரா படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

கவின் - நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது...
Published on

நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா, இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்துக்கு “ஹாய்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த நிலையில், இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர்களை படக்குழுவினர் இன்று (அக். 8) வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, இப்படத்தின் இயக்குநர் விஷ்ணு எடவன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன், அஜித் குமாரின் விடாமுயற்சி, விஜய்யின் லியோ மற்றும் சிவகார்த்திகேயனின் மதராஸி ஆகிய திரைப்படங்களின் பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பெற்றோர் இல்லாத வாழ்வு கொடூரமானது: பிக் பாஸில் நந்தினி உருக்கம்!

Summary

The new film starring actors Kavin and Nayanthara is titled “Hi”.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com