
சகப் போட்டியாளர்களுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பிக் பாஸிடம் திவாகர் மனம்திறந்து பேசிய விடியோ வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ் சீசன் 9 தொடக்க நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, இயக்குநர் பிரவீன் காந்தி உள்பட 20 பேர் வீட்டிக்குள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
முதல் நாள் இரவே, திவாகருக்கும் கெமிக்கும் இடையே பிசியோதெரபிஸ்ட் என்பவர் மருத்துவரா? இல்லையா? என்ற வாதம் மோதலில் முடிந்தது. மறுநாள், காலை திவாகருக்கும் பிரவீனுக்கும் இடையே குரட்டை பிரச்னையால் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், ரம்யா மற்றும் அரோரா ஆகிய இருவரும் பிக் பாஸ் டீலக்ஸ் வீட்டில் இருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் திவாகரிடம் வேலை வாங்கினர். அப்போது, கன்ட்ரி ஃப்ருட் (country fruit) என்ற வார்த்தையை திவாகர் பயன்படுத்தினார். (சரியான வார்த்தை கன்ட்ரி ப்ரூட் - country brute, ஆனால் திவாகர் நகைச்சுவைக்காக மாற்றி பயன்படுத்தினார்).
இதையடுத்து, திவாகரை நோக்கிச் சென்ற ரம்யா, தன்னைப் பார்த்து ஏன் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது கோபமடைந்த திவாகர் கத்திப் பேசினார். உடனே, கத்தும் வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று திவாகரைப் பார்த்து ரம்யா பதிலளித்தார். இதையடுத்து, “மரியாதையாக பேசு, நீயெல்லாம் படித்து இருக்கிறாயா? இல்லையா?, நாகரீகம் தெரியுமா?” என ரம்யாவை பார்த்து திவாகர் கேட்டார்.
தொடர்ந்து, வீட்டில் இருந்த சில போட்டியாளர்கள் திவாகரை எதிர்த்து பேசத் தொடங்கினர். அப்போது, கோபமடைந்த எஃப்.ஜே. ‘வெட்டிவிடுவேன்’ என திவாகரைப் பார்த்து சைகையுடன் பேசினார்.
மேலும், கம்ரூதினும் திவாகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தாக்குவது போன்று தள்ளிவிட்டார். உடனடியாக அங்கிருந்த சகப் போட்டியாளர்கள் கம்ரூதினைத் தடுத்தனர்.
இந்த நிலையில், கேமிரா முன் நின்று பிக் பாஸிடம் பேசிய திவாகர், “என்ன ஆக்டிங் செய்யவிடாமல் தடுக்கிறார்கள். யாருக்கும் வலுவான முடிவை எடுக்கத் தெரியவில்லை. வெட்டிவிடுவேன் சொன்னதை ஒருத்தர்கூட கேட்கவில்லை. மற்றொருவர் இல்லாத பிரச்னையைத் தூண்டுகிறார். இன்னொருவர் நேரடியாக என்னைத் தள்ளிவிடுகிறார். நான் பொறுமையாகதான் இருக்கிறேன்.” எனப் பேசியுள்ளார்.
கேமிரா முன் திவாகர் பேசிய விடியோவை அவரது ஆதரவாளர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே, திவாகரை உருவ கேலிச் செய்த ரம்யாவின் விடியோவையும் இணையத்தில் பகிர்ந்து, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.