தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இசை நிறுவனத்தை துவங்கியுள்ளார்.
லேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளரான ஐசரி கணேஷ் தற்போது 10 திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். இதில், நடிகர்கள் தனுஷ், விஷணு விஷால், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
தமிழின் முக்கியமானத் தயாரிப்பு நிறுவனமாக வேல்ஸ் மாறிவரும் நிலையில், இன்று தன் பிறந்த நாளில் வேல்ஸ் மியூசிக் இண்டர்நேஷனல் என்கிற இசை நிறுவனத்தை ஐசரி கணேஷ் துவங்கியுள்ளார்.
இதன் அறிமுக நிகழ்வில் நடிகர்கள் தனுஷ், விஷ்ணு விஷால், விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், இசையமைப்பாளர்கள் ஏ. ஆர். ரஹ்மான், அனிருத், இமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: பிக் பாஸ் வீட்டுக்கு சீல்! போட்டியாளர்கள் வெளியேற்றம்! ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.