தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஓடிடியில் இட்லி கடை எப்போது?

இட்லி கடை படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image
Updated On :9 அக்டோபர் 2025, 9:05 am

இணையதளச் செய்திப் பிரிவு

இட்லி கடை படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த திரைப்படமான இட்லி கடை கடந்த அக்.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் நாயகியாக நித்யா மெனனும் வில்லனாக அருண் விஜய்யும் நடித்திருக்கின்றனர். மேலும் ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரகனி, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து தன் கிராமத்துக்கு திரும்பும் தனுஷ், தன் தந்தையின் தொழிலான இட்லி கடையை எப்படி வெற்றிகரமாக நடத்துகிறார் என்பதை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டது.

இப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 11 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இட்லி கடை திரைப்படம் வரும் அக். 29 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் தெரியவந்துள்ளது.

Summary

Information about the OTT release date of the film Idli Kadai has been revealed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.