
நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி தற்போது நடிகர் சூர்யாவை வைத்து கருப்பு என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு திரைக்கு வருகிறது.
அதேநேரம், நடிகர் மணிகண்டன் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து முத்து என்கிற காடன் என்கிற இணையத் தொடரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆர்ஜே பாலாஜி நடிகர் மணிகண்டனிடம் புதிய கதையொன்றைச் சொன்னதாகவும் அது மணிக்கு பிடித்ததால் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருப்பு வெளியீட்டிற்குப் பின் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தில் மெண்டல் மனதில் படப்பிடிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.