நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இட்லி கடை வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறார். இதற்கிடையே, இவரின் 54-வது படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
தற்போது, இயக்குநர் மாரி செல்வராஜ் திரைப்படத்திற்கு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷ் - சாய் பல்லவி கூட்டணியில் உருவான மாரி - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அப்படத்தில் இடம்பெற்ற ரௌடி பேபி பாடல் உலகளவில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மணிகண்டன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.