
நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ள டீசல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஹரிஷ் கல்யாண் லப்பர் பந்து திரைப்படத்திற்குப் பின் நடித்துள்ள திரைப்படம் டீசல். ஆக்சன், திரில்லர் கதையாக உருவான இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் அதுல்யா ரவி நாயகியாகவும், நடிகர்கள் வினய், கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தேவராஜுலு மார்க்கண்டேயன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். தணிக்கை வாரியம் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
முன்னதாக இப்படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இன்று(அக். 10) டிரைலர் வெளியாகி, வைரலாகியுள்ளது.
டீசல் திரைப்படம் தீபாவளியையொட்டி வரும் அக். 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: முதல் வாரத்திலேயே முன்னிலையில் அனுமன் தொடர்! இந்த வார டிஆர்பி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.