
மகாநதி தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் கமுருதீன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளதால், அந்தத் தொடரில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மகாநதி தொடரில் குமரன் பாத்திரத்தில் நடித்து வருபவர் கமுருதீன். இவர் இந்தத் தொடரில், தன்னுடையெ அழுத்தமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்தத் தொடரில் இவருக்கு ஜோடியாக ஸ்வேதா குமார் நடித்து வருகிறார். இவர்களின் இணைக்கு சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், அண்மையில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகர் கமுருதீன் சென்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் படங்களில் நாயகனாக வேண்டும் என்ற கனவுடன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாகத் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, நடிகர் கமுருதீன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ள நிலையில், அவர் நடித்து வந்த குமரன் பாத்திரம், மலேசியா செல்வதாகக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
கமுருதீனுக்கு பதிலாக, புதிய நடிகர் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கதையில் திடீர் திருப்பமாக கமுருதீன் மலேசியா செல்வதாக மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஓடிடியில் நேரடியாக வெளியான அருள்நிதியின் ராம்போ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.