இயக்குநர் அட்லி நடிகர் ரிஷப் ஷெட்டி குறித்து பேசியுள்ளார்.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் - 1 அக். 2 ஆம் தேதி இந்தியளவில் பிரம்மாண்டமாக வெளியானது.
காந்தாரா திரைப்படத்தின் முன்கதையாக உருவான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் கிடைத்திருப்பதால் இதுவரை ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் அட்லி, “காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் வெளியானபோது நான் ஆம்ஸ்டர்டம்மில் இருந்தேன். அங்கிருந்து 2.5 மணி நேரம் பயணம் செய்து படத்தைப் பார்த்துவிட்டு உடனே ரிஷப் ஷெட்டிக்கு அழைத்தேன்.
ஒரு நாயகனாகவும் இயக்குநராகவும் இப்படத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதானதல்ல. அவர் அனைத்து இயக்குநர்களுக்கும் பெரிய உத்வேகத்தை அளிக்கிறார். நம்பவே முடியவில்லை. ரிஷப் ஷெட்டி தேசிய விருதை வெல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தரமான மசாலா படங்களை எடுப்பது முக்கியம்: நலன் குமாரசாமி
director atlee wishes to rishab shetty for kantara chapter - 1
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
