தரமான மசாலா படங்களை எடுப்பது முக்கியம்: நலன் குமாரசாமி

வா வாத்தியார் குறித்து நலன் குமாரசாமி...
கார்த்தி, நலன் குமாரசாமி
கார்த்தி, நலன் குமாரசாமி
Published on
Updated on
1 min read

இயக்குநர் நலன் குமாரசாமி வா வாத்தியார் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் கார்த்தி - நலன் குமாரசாமி கூட்டணியில் வா வாத்தியார் திரைப்படம் உருவாகியுள்ளது. சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களைத் தொடர்ந்து நலன் இயக்கிய படமென்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் இப்படம் குறித்து பேசிய நலன் குமாரசாமி, “வா வாத்தியரின் கதை எம்ஜிஆர் ரசிகரான தாத்தாவுக்கும் அவரின் பேரனுக்குமான கதையாக உருவாகியுள்ளது. பேரனாக ராமு கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். இப்படத்தை 1980 - 90களில் எடுக்கப்பட்ட முழு ஆக்சன் மசாலா படங்களைப் போல் எடுக்க விரும்பினேன்.

நம் நாட்டில் உணவு, கலாசாரம் தனித்திருக்கிற மாதிரிதான் திரைப்படங்களும் இருக்கின்றன. நாம் இன்று உருவாக்குகிற படங்களுக்கும் அந்தக் காலத்தில் வந்த தில்லானா மோகனாம்பாள், ரத்தக் கண்ணீர் வரை தொடர்பு உண்டு என நம்புகிறேன். இது ஒரு பாரம்பரியம். அந்த பாரம்பரியத்திற்குள் மசாலா படங்கள் வருகின்றன. அதனால், தரமான மசாலா திரைப்படங்களை எடுப்பது ரொம்ப முக்கியம் என நினைக்கிறேன்”

Summary

nalan kumarasamy spokes about vaa vaathiyar movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com