இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா? பிரதீப் ரங்கநாதன் பதில்!

நடிகர் பிரதீப் ரங்கநாதனிடம் தெலுங்கு பத்திரிகையாளர் கேட்ட அநாகரிகமான கேள்வி குறித்து...
டியூட் படத்தின் போஸ்டர்.
டியூட் படத்தின் போஸ்டர். படம்: எக்ஸ் / மைத்ரி மூவி மேக்கர்ஸ்.
Published on
Updated on
1 min read

நடிகர் பிரதீப் ரங்கநாதனிடம் தெலுங்கு பத்திரிகையாளர் ஒருவர், “உங்களுக்கு ஹீரோ மெட்டீரியல் முகமே இல்லையே” எனக் கேள்வி கேட்டது சர்ச்சையாகி வருகிறது.

உருவ கேலி வகைமையில் வரும் இந்தக் கேள்விக்கு பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் தற்போது முழுநேர நடிகராக நடித்து வருகிறார். கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ள டியூட் எனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு அக்.17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதன் புரமோஷன் பணிகளுக்காக, டியூட் படக்குழு ஹைதராபாத் சென்றிருந்தது.

அங்கு நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் தெலுங்கு பத்திரிகையாளர் ஒருவர், “உங்களுக்கு ஹீரோ மெட்டீரியல் முகமே இல்லை என்றாலும் இரண்டே படத்தில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் எப்படி?” எனக் கேட்டார்.

இந்தக் கேள்விக்கு நடிகர் சரத்குமார் குறுக்கிட்டு பதிலளித்தார். பின்னர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது:

கடின உழைப்பு, கடவுளின் ஆசிர்வாதம் இரண்டுமே காரணம் என்று நினைக்கிறேன். அதைவிடவும் மக்கள் என்னை அவர்களில் ஒருவராகப் பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்.

அதனால்தான் அவர்கள் திரையில் என்னைப் பார்க்கும்போது அவர்கள் என நினைத்துக்கொள்கிறார்கள்.

திரையில் சண்டையிடுவது, காதல் செய்வது எல்லாமே அவர்கள்தான். அதானல், நான் ஏற்கெனவே ஹீரோ ஆகிவிட்டேன் என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவரை ஹீரோ, ஹீரோ எனப் புகழ்ந்தார்கள்.

இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இருப்பினும் உருவ கேலி குறித்த கேள்விகளை தவிர்க்கலாம் எனவும் கருத்துகள் பரவி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com