
நடிகர் மோகன்லாலின் ராவணபிரபு திரைப்படம் மறுவெளியீடாகியுள்ளது.
நடிகர் மோகன்லால் இறுதியாக நடித்த எம்புரான், துடரும், ஹ்ருதயப்பூர்வம் ஆகிய திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடித்து அவருக்கு வணிக ரீதியாகவும் நல்ல இடத்தைக் கொடுத்திருக்கின்றன.
இந்த நிலையில், இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ராணவபிரபு திரைப்படத்தை மறுவெளியீடு செய்துள்ளனர்.
அக். 10 ஆம் தேதி மறுவெளியீடான இப்படம் முதல் இரண்டு நாள்களிலேயே ரூ. 1.5 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கேரளத்தின் பெரிய திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையிடப்பட்டு வருகின்றன. இதனால், இப்படம் மறுவெளியீட்டிலும் நல்ல வசூலைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இவ்வளவு பெரிய படத்தில் இதைக் கவனிக்கவில்லையா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.