சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
அமரன், மதராஸி திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் பீரியட் அரசியல் கதையாக எடுக்கப்பட்டு வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முக்கியமாக, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வருவதால் நிச்சயம் ஏமாற்றம் ஏற்படாது என பலரும் நம்புகின்றனர்.
இப்படத்தில் வில்லனாக ரவி மோகனும், முக்கிய கதாபாத்திரங்களில் அதர்வா, ஸ்ரீலீலா, ஃபாசில் ஜோசஃப் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இதையும் படிக்க: அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்
Summary
sivakarthikeyan's parasakthi movie shoot wrapped
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையத்தில் கசிந்தபோது சிவகார்த்திகேயன் ஆதரவாக இருந்தார்: தயாரிப்பாளர்
பராசக்தி ஏன் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை? தயாரிப்பாளர் பதில்!

அன்பே டயானா படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!

எல்லாம் இனிதே... சேயோன் சிவகார்த்திகேயன்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


