
பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக சின்னத்திரை நடிகை ஆயிஷா மீண்டும் நுழைந்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடந்து வருகிறது, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தற்போது 9 ஆவது சீசன் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், தமிழ் பிக் பாஸ் 6 ஆவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களை ஈர்த்த சின்ன திரை நடிகை ஆயிஷா தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 9 வது சீசன் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், 35 வது நாளான நேற்று, ஆயிஷா உள்பட 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.
ஆயிஷா, தமிழ் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்று 63 நாள்கள் விளையாடியுள்ளார். தமிழ் பிக் பாஸில், வலுவான கருத்துக்களுக்கும், வெளிப்படையாகப் பேசும் தன்மைக்கும் பெயர் பெற்றவர்.
இவரின் பங்கேற்பால் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு போட்டியாளர்கள் சென்ற முதல் நாளே, 6 பேரும் சேர்ந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பவரைப் பயன்படுத்தி போட்டியாளர் சிரிஜாவை வெளியேற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.