பிக் பாஸை விமர்சிப்பதால் எந்தப் பலனும் இல்லை: விஜய் சேதுபதி எச்சரிக்கை

பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சிப்பதால் எந்தப் பலனும் இல்லை என போட்டியாளர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி அறிவுரை கூறியுள்ளார்.
vijay sethupathi never break rules
விஜய் சேதுபதி படம் - எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சிப்பதால் எந்தப் பலனும் இல்லை என போட்டியாளர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி அறிவுரை கூறியுள்ளார்.

பிக் பாஸ் விதிகள் பாரபட்சமாக உள்ளதாக நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை ஆதிரை விமர்சித்து, போட்டி விதிகளை மீறிய நிலையில், விஜய் சேதுபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி அக். 5ஆம் தேதி விமர்சையாகத் தொடங்கியது. இந்த முறை 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, இயக்குநர் பிரவீன் காந்தி, நடிகை கெமி, ஆதிரை, ஆடல் - பாடல் கலைஞர் ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்‌ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்கான தலைவரைத் தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்று நடிகை ஆதிரை, பிரவீன் ராஜ், துஷார் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர்.

இறுதிப் போட்டியில் தனக்கு வழங்கப்பட்ட முகமூடி பாரபட்சமாக இருந்ததாகக் கூறி நடிகை ஆதிரை பிக் பாஸ் விதிகள் குறித்து விமர்சித்துப் பேசியிருந்தார். ''துஷாருக்கு வாய் மூட துணி கொடுக்காமல், முகத்தை மூடும் அளவுக்கு துணி கொடுத்ததால், பரிதாபத்தின்பேரில் பலர் துஷாருக்கு வாக்களிக்க நேர்ந்தது.

அதனால், பிக் பாஸ் வீட்டின் தலைவராக துஷார் தேர்வாகிவிட்டான். ஆனால், தேர்வான பிறகு வாயில் கட்டியிருந்த துணியை எடுத்துவிட பிக் பாஸ் உத்தரவிட்டார். ஆனால், நான் மட்டும் முகமூடி அணிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. என் முகத்தை நிகழ்ச்சியில் காட்ட வேண்டும்'' என பிக் பாஸ் விதிகளில் இருந்த குறைகளை சுட்டிக்காட்டினார்.

வார இறுதி நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி, ''பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளீர்கள். நிகழ்ச்சியின் விதிகளுக்குட்பட்டு விளையாடும்போதே மக்களுக்கு சுவாரசியம் ஏற்படும்.

ஆனால், பிக் பாஸ் விதிகளை விமர்சிப்பதால் எந்தப் பலனும் இல்லை. நிகழ்ச்சியை சுவாரசியமாக்குவதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கருத்துகள் விதிகளுக்குட்பட்டு இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும். அதில் விதிமீறல்கள் இருந்தால் அதனை பிக் பாஸ் சுட்டிக்காட்டுவார்'' என விஜய் சேதுபதி குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் ஒரு போதிமரம்: இயக்குநர் பிரவீன் காந்தி கருத்து

Summary

Bigg boss tamil 9 vijay sethupathi never break rules

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com