பிக் பாஸ் ஒரு போதிமரம்: இயக்குநர் பிரவீன் காந்தி கருத்து

பிக் பாஸ் நிகழ்ச்சித் தொடங்கிய முதல் வாரத்திலேயே வெளியேறிய இயக்குநர் பிரவீன் காந்தி கூறிய கருத்துகள் பற்றி...
விஜய் சேதுபதியுடன் பிரவீன் காந்தி
விஜய் சேதுபதியுடன் பிரவீன் காந்திபடம் - எக்ஸ்
Published on
Updated on
2 min read

போட்டி தொடங்கிய முதல் வாரத்திலேயே வெளியேறிய இயக்குநர் பிரவீன் காந்தி, பிக் பாஸ் ஒரு போதிமரம் என கருத்துத் தெரிவித்துள்ளார்.

4 படங்கள் ஒரே நாளில் வெளியானால், அதில் ஏதாவது ஒரு படம் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி கொள்பவன் நான், அதனால், பிக் பாஸ் வீட்டில் உள்ள 18 பேரில் யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சியே எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 6 ஆம் தேதி பிரமாண்டமாகத் தொடங்கியது. இம்முறை 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், யோகா ஆசிரியை நந்தினி, பிக் பாஸில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்து, கடந்த வெள்ளிக்கிழமை வெளியேறினார். இதனால், பிக் பாஸ் வீட்டில் 19 போட்டியாளர்கள் இருந்தனர்.

வார இறுதி நாள்களாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதில், ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேறவுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த வாரத்தில் மொத்தம் 7 போட்டியாளர்கள் நாமிநேஷன் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், அப்சரா, கலையரசன், வியானா, ஆதிரை, திவாகர் ஆகியோர் வெளியேறும் நபர்களின் பட்டியலில் இருந்தனர். இதில் மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்ற பிரவீன் காந்தி வெளியேறினார்.

பிரவீன் காந்தி
பிரவீன் காந்தி

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பிரவீன் காந்தி பேசியதாவது,

''பிக் பாஸ் வீட்டில் ஒருவாரத்தில் எனக்குள் பல மாறுதல்கள், கிட்டத்தட்ட புத்தருக்கு போதிமரம் போன்று, எங்களுக்கு இந்த பிக் பாஸ் வீடு இருந்தது.

பிக் பாஸ் ஒரு ஸ்கிரிப் நிகழ்ச்சி. அதாவது, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி என்று பலர் வெளியே பேசுவதுண்டு. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி அப்படி இல்லை. பிக் பாஸ் ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி அல்ல. இங்கு வந்தால் 100 ஸ்கிரிப்ட்களை எழுதிக்கொண்டு செல்லலாம். வெளியே சென்று நான் உற்சாகமாக பணியாற்ற உள்ளேன்.

பிக் பாஸ் வீட்டில் தற்போது தலைவராகத் தேர்வாகியுள்ள துஷார், இன்னும் ஒரு 10 ஆண்டுகளில் விஜய் சேதுபதி போன்றோ அல்லது அதற்கு நிகரான இடத்திலோ இருப்பார் எனக் கருதுகிறேன்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ஆயிஷா! வைல்டு கார்டு என்ட்ரி!

Summary

Praveen gandhi evicted in bigg boss 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com