
மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் மகன் பபில் கானின் இன்ஸ்டா பதிவு (கவிதை) சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பதிவில் தனக்கு மன அழுத்தம் குறித்து கவிதையாக எழுதியுள்ளார். இந்தப் பதிவுக்கு நடிகர் விஜய் வர்மா வரவேற்பு அளித்துள்ளார்.
பாலிவுட்டில் மிகச்சிறந்த நடிகராக அறியப்பட்டவர் இர்ஃபான் கான். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு புற்று நோய் பாதிப்பினால் இறந்தார்.
இவரது மகன் பபில்கான் குவாலா, ஃபரைடே நைட் பிளான் என்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்த லாக் அவுட் படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
கட்ந்த மே மாதத்தில் அவர் அழுதுகொண்டே ”பாலிவுட் மிகவும் மோசமானது” என விடியோ பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், அதை நீக்கிவிட்டு அதற்கு விளக்கமும் அளித்திருந்தார்.
இந்நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்ஸ்டா வந்துள்ள அவர், கவிதை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் இருப்பதாவது:
இரகசியமாகக் கேட்பதைச் சொல்லவில்லை,
இந்தக் கண்ணாடி வீடு மெலிந்த சுவர்களாலானவை.
என் இதயத்தை எனது ஸ்லீவ்ஸில் அணிகிறேன்,
தற்போது, எனது டிஷர்ட் ரத்தத்தினால் நனைந்துள்ளது.
இது குணமாக காலம் தேவைப்படும்,
என்னுடைய பூதம் என்னை ஆழமாக வெட்டிவிட்டது.
தூக்கமின்மை, பயம் சேர்ந்து என்னை ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவைக்கிறது,
உதவிக்காக அழுகிறேன், எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த மூச்சுத் திணறுகிறது.
என் உடலின் பாரம் அதிகரிக்கிறது, உளவியல் அடக்குமுறையினால் எனது ஆன்மா சலிப்படைந்துவிட்டது.
“நீங்கள் உங்கள் காதலியுடன் சண்டையிடும்போது, நான் எனது மன உளைச்சலுடன் போராடுகிறேன். காத்திருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.