
மக்களுக்குப் பிடித்த நடிகை என்ற பிரிவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஷாலினி விருது பெற்றுள்ளார்.
துபை, மலேசியாவில் செயல்பட்டு வரும் ஸ்டூடியோ ஒன் நிறுவனம் சின்ன திரையில் மக்கள் மனம் கவர்ந்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கி வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு, மக்களுக்குப் பிடித்த நடிகை என்ற பிரிவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ராஜி பாத்திரத்தில் நடித்துவரும் ஷாலினி விருது பெற்றுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஆகாஷ் பிரேம்குமாரும் மக்களுக்குப் பிடித்த நடிகர் பிரிவில் விருது வென்றுள்ளார்.
இதன்மூலம், ஒரே தொடரைச் சேர்ந்த இருவர் மக்களுக்குப் பிடித்தமான நடிகர், நடிகை விருதைப் பெற்றுள்ளனர். இவர்களுக்கு சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக் கிழமை வரை இரவு 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகம் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. தற்போது இரண்டாவது பாகம் அப்பா, மகன்களின் பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
மகன்களுக்கு திருமணம் செய்து வைத்து, மருமகள்கள் வந்த பிறகு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து தற்போது கதை நகர்கிறது. பிரியா தம்பி திரைக்கதை, வசனம் எழுத டேவிட் சார்லி பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரை இயக்குகிறார்.
முதல் பாகத்தில் நடித்த வெங்கட் ரங்கநாதன், ஸ்டாலின் முத்து, ஹேமா ராஜ் இவர்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது பாகத்தில் நடிகை நிரோஷா, வி.ஜே.தங்கவேல் கந்தசாமி, ஆகாஷ் பிரேம்குமார், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராடுவோம்! தடை செய்ய வலியுறுத்தல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.