நடிகர் விஷால் மகுடம் திரைப்படத்தை இயக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு நடிகர் விஷாலை வைத்து மகுடம் திரைப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் துவங்கியது.
சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகும் இதில் நடிகை துஷாரா விஜயன் நாயகியாகவும் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு ‘மகுடம்’ எனப் பெயரிட்டுள்ளனர். கடல் மற்றும் துறைமுகம் சார்ந்த கதையாக இப்படம் இருக்கும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், இயக்குநர் ரவி அரசுக்கு பதிலாக விஷாலே படத்தை இயக்கி வருகிறாராம். அவரே காட்சிகளை இயக்கும் விடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இயக்குநருக்கும் விஷாலுக்கு ஏதாவது பிரச்னையா இல்லை தயாரிப்பு நிறுவனத்துடன் கருத்து வேறுபாடா எனத் தெரியவில்லை. ஆனால், திடீரென இயக்குநர் இல்லாமல் விஷாலே படத்தை எடுத்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: அரசன் புரோமோ 5 நிமிடம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.