
நடிகை காஜல் அகர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
2010 - 2016 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். நடிகர்கள் விஜய், அஜித் உள்பட நட்சத்திர நடிகர்களுடன் நடித்தவர் மெல்ல மெல்ல மார்க்கெட்டை இழந்தார்.
அதன்பின், சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இறுதியாக, சிக்கந்தர் மற்றும் கண்ணப்பா படங்களில் நடித்திருந்தார். இரண்டும் தோல்விப் படங்களாகின.
இந்த நிலையில், தான் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை காஜல் அகர்வால் வெளியிட்டதும் இவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
திரைப்படங்களில் மீண்டும் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக காஜல் அகர்வால் இளம் தோற்றத்திற்கான ‘டீ ஏஜிங்’ சிகிச்சையை மேற்கொண்டு வருவதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: அரசியலுக்கு வருவீர்களா? மாரி செல்வராஜ் பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.