இயக்குநர் மாரி செல்வராஜ் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர் என்கிற பெயரைப் பெற்றவர் மாரி செல்வராஜ்.
இவர் இயக்கத்தில் வெளியாகவுள்ள பைசன் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், 1900-களில் தென்மாவட்டங்களில் நிலவிய சாதிய மோதல்கள் மற்றும் தீண்டாமையை மையமாக வைத்து கபடி வீரரின் கதையைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், இத்திரைப்படம் சமூகத்தில் விவாதப் பொருளாக மாறும் என்பதிலும் மாரி செல்வராஜ் உறுதியாக இருக்கிறார்.
இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மாரி செல்வராஜிடம், ‘அரசியலுக்கு வருவீர்களா?’ எனக் கேட்கப்பட்டது.
அதற்கு மாரி செல்வராஜ், “என் வாழ்க்கையில் கலைதான் எனக்கு பெரிய போதை. பதற்றத்திலேயே இருப்பதால் மிக விரைவாக வேலை பார்க்கக்கூடிய ஆள் நான். நிறைய படங்களை எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இன்னும், 15 கதைகளையாவது திரைப்படமாக உருவாக்க விரும்புகிறேன். அதனால், அரசியலுக்கு வர மாட்டேன். ஆனால், இயக்குநர் பா. இரஞ்சித் வருவார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: காளமாடன் வருகை... யார் இந்த மணத்தி கணேசன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.