

தீபாவளித் திருநாளில் வெளியாகும் படங்களை ஒன்றோடு ஒன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்று நடிகர் சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்த எக்ஸ் பதிவில் அவர் கூறியதாவது ``இந்த தீபாவளி நமது இளைஞர்களுக்கானது. டீசல், டியூட், பைசன் ஆகிய படங்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் கடின உழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, இவற்றை நமது தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாகக் கொண்டாடுவோம். சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்கள், காலடி எடுத்துவைக்க காத்திருப்பவர்களை ஆதரித்து, சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருப்போம். அனைத்து திரைப்படங்களையும் திரையரங்குகளில் பாருங்கள்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் கலக்கலான படங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.