சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

மாட்டிறைச்சி காட்சி.. தணிக்கை விவகாரம்! ஷேன் நிகாமின் படத்தை பார்க்க நீதிமன்றம் முடிவு!

நடிகர் ஷேன் நிகாமின் ‘ஹால்’ திரைப்படத்தை பார்க்க கேரள உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது குறித்து...

நடிகர் ஷேன் நிகாம் - (கோப்புப் படம்)

Published On :

தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தின் விசாரணைக்காக, மலையாள நடிகர் ஷேன் நிகாமின் “ஹால்” திரைப்படத்தை பார்க்க கேரள உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

மலையாள நடிகர் ஷேன் நிகாம் கதாநாயகனாக நடித்துள்ள, ‘ஹால்’ திரைப்படத்தில் மாட்டிறைச்சி பிரியாணி உண்ணும் காட்சி மற்றும் சில வசனங்களை நீக்க, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. அதற்கு, படக்குழு மறுப்பு தெரிவித்ததால் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து, ஹால் படக்குழுவினர் கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த விவகாரம் குறித்த விசாரணையில், ஹால் திரைப்படத்தை நீதிமன்றமோ அல்லது அவர்கள் நியமிக்கும் பிரதிநிதியோ பார்க்க வேண்டும் என்று படக்குழுவின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதிபதி வி.ஜி. அருண் ஹால் திரைப்படத்தை விரைவில் பார்க்கபோவதாகக் கூறியதுடன், திரையிடலில் தணிக்கை வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, அறிமுக இயக்குநர் வீர் இயக்கத்தில், நடிகர்கள் ஷேன் நிகாம், சாக்‌ஷி வைதியா ஆகியோரின் நடிப்பில் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘ஹால்’ திரைப்படம், கடந்த செப்.12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு; பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.