பைசன் திரைப்படத்தில் நடிகர் பசுபதியின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகராக அறியப்படுபவர் பசுபதி. வில்லனாக, நாயகனாக, நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர கதாபாத்திரமாக கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் மிகக் கச்சிதமாக பயன்படுத்தி ரசிகர்களிடம் நல்ல நடிகராக வலம் வருகிறார்.
சார்பட்டா பரம்பரையில் வாத்தியாராக நடித்து மிகப்பெரிய கவனத்தைப் பெற்றவர் தங்கலானிலும் கவனம் ஈர்க்கும் நடிப்பை வழங்கியிருந்தார்.
தற்போது, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் திரைப்படத்தில் துருவ்வுக்கு அப்பாவாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
மகனிடம் கபடி விளையாடாதே என கண்டிக்கவும், கபடி வீரனான தன் மகனுக்காக காவல்துறையினரிடம் கெஞ்சும் தந்தையாகவும் சிறந்த நடிப்பை பசுபதி வழங்கியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதுடன் இந்த முறையாவது தேசிய விருது கிடைக்க வேண்டும் என தங்களின் எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: காளமாடனும் சாதிக் கலவரங்களும்... பைசன் - திரை விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.