
பிக் பாஸ் - 9 நிகழ்ச்சியின் முதல் வார டிஆர்பி விவரம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு, எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இவர் தொகுத்து வழங்கும் பாணி ரசிகர்களைக் கவர்ந்தது. இந்த நிலையில், 9வது புதிய சீசனையும் விஜய்சேதுபதியே தனக்கே உரித்தான பாணியில் தொகுத்து வழங்கி வருகிறார்.
சின்ன திரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள், நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
அதன்படி, பிக் பாஸ் - 9 நிகழ்ச்சி, முதல் வாரத்தில் மட்டும் 4.14 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.
வழக்கமாக, தொடர்களே அதிகப்படியான டிஆர்பி புள்ளிகளைப் பெறும் சூழலில், ரியாலிட்டி ஷோ ஒன்று அதிகப்படியான டிஆர்பி புள்ளிகளைப் பெறுவது பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிக் பாஸ் 9: அடுத்த வார வெளியேற்றத்தில் இருந்து தப்பித்தது யார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.