
காந்தாரா சாப்டர் - 1 திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்தப் படம் கடந்த அக்.2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
கார்நாடகத்தின் தொன்மம், கடவுள், நில அரசியலை மையமாக வைத்து உருவாகிய இந்தப் படம் 2022-இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
படத்தின் கதை சுமாராக இருந்தாலும் படத்தின் உருவாக்கம் ஹாலிவுட் லெவலில் இருப்பதாக அனைவரும் பாராட்டுகிறார்கள். குறிப்பாக படத்தின் பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படம் உலக அளவில் இதுவரை ரூ.600க்கும் அதிகமாக வசூலை ஈட்டியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ஒடிடி வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அமேசான் பிரைம் விடியோ ரூ.125 கோடிக்கு படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்றுள்ளதாகவும், விரைவில் பல மொழிகளில் படத்தை வெளியிடத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, அக்டோபர் 30ஆம் தேதி அமேசான் பிரைம் விடியோவில் படம் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்தி-டப்பிங் பதிப்பு எட்டு வார இடைவெளிக்குப் பிறகு வெளிவரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுகுறித்து தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.