சிங்கப் பெண்ணே தொடருக்கு சறுக்கல், முன்னிலையில் எதிர்நீச்சல்! இந்த வார டிஆர்பி!

இந்த வார டிஆர்பி வ்
எதிர்நீச்சல் தொடர், சிங்கப் பெண்ணே தொடர் போஸ்டர்கள்.
எதிர்நீச்சல் தொடர், சிங்கப் பெண்ணே தொடர் போஸ்டர்கள்.
Published on
Updated on
1 min read

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே, எப்போதும் டிஆர்பியில் முதல் 5 இடங்களைப் பிடித்து வருகின்றன.

அந்த வகையில், கடந்த வாரம் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்த சிங்கப் பெண்ணே தொடர், இந்த வாரம் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேபோல, கடந்த வாரம் நான்காம் இடத்தில் இருந்த எதிர்நீச்சல் தொடர், இந்த வாரம் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

அந்தவகையில், தொடர்களின் டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு தொடர்,10. 11 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

எதிர்நீச்சல் தொடர், 9.80 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

அன்னம், கயல், மருமகள் ஆகிய தொடர்களின் சங்கமமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட தொடர், 9.76 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.

சிங்கப் பெண்ணே தொடர் 9.58 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது. கயல் தொடர் 8.98 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. மருமகள் தொடர் 8.55 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஆறாம் இடத்தில் உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் 8.10 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஏழாம் இடத்தில் உள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் தொடர் 7.87 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று எட்டாம் இடத்தையும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை தொடர் 7.65 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஒன்பதாவது இடத்தையும் பிடித்து இருக்கின்றன.

இதிகாசத் தொடரான அனுமன் சீரியல் 6.41 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று பத்தாவது இடத்தில் உள்ளது.

Summary

The TRP details of the series have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com