டியூட் அதிகாரபூர்வ வசூல்..! நம்பமுடியாத அளவுக்கு வளரும் பிரதீப் ரங்கநாதன்!

பிரதீப் ரங்கநாதனின் டியூட் பட வசூல் குறித்து...
Dude Film poster.
டியூட் படத்தின் போஸ்டர். படம்: எக்ஸ் / மைத்ரி மூவி மேக்கர்ஸ்.
Published on
Updated on
1 min read

பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படத்தின் வசூல் குறித்த அதிகாரபூர்வ வசூல் விபரம் வெளியாகியுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் தனது மூன்றாவது படத்திலேயே நம்பமுடியாத அளவுக்கு கமர்ஷியல் ஹீரோவாக மாறியுள்ளார்.

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன், லவ்டுடே படத்தில் நாயகனாக ஜொலித்தார். டிராகனிலும் வெற்றி வாகை சூடிய அவருக்கு டியூட் ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்துள்ளது.

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் மமிதா பைஜூ, சரத்குமார் உள்ளிட்டவர்களுடன் உருவான இந்தப் படம் நேற்று (அக்.17) உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப்படம் மைத்ரி மூவி மேக்கர்ஸின் இரண்டாவது நேரடியான தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் முதல்நாள் வசூல் ரூ.22 கோடி என படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு வெளியான படங்களில் பந்தையத்தை டியூட் அடித்துள்ளது.

Summary

The official box office collection details for Pradeep Ranganathan's film Dude have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com