டியூட் படத்தின் 2 நாள் வசூல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
டியூட் படத்தின் 2 நாள் வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “டியூட்”.
மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன், லவ்டுடே படத்தில் நாயகனாக நடித்தார். டிராகன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில் தீபாவளி வெளியீடாக வெளியான டியூட் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்தப் படத்தின் இரண்டு நாள் வசூல் ரூ.45 கோடியைத் தாண்டியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் முன்னணி நடிகர்கள் வரிசையில் பிரதீப் ரங்கநாதனும் இணைந்துள்ளார்.
இதையும் படிக்க: ரசிகர்களைக் கவர்ந்த டியூட் சரத் குமார்!
The 2-day collection details of the film Dude have been officially announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

