டீசல் திரைப்படத்தின் இயக்குநர் தங்களுக்கு முறையான திரைகள் கிடைக்கவில்லை என ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இந்த தீபாவளி வெளியீடாக பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ்வின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வந்தன. இதில், டியூட் மற்றும் பைசன் நல்ல விமர்சனங்களைப் பெற்று வணிக வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.
ஆனால், டீசல் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் வணிக ரீதியாகச் சரிவையே சந்தித்துள்ளது.
இந்த நிலையில், எந்தெந்த திரைப்படங்களுக்கு எவ்வளவு டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளன என்கிற தரவுகளை சினிமா சார்ந்த நிறுவனம் ஒன்று வெளியிட்டது.
அதில், டீசலுக்கு மிகக் குறைவான டிக்கெட்களே விற்றது தெரியவந்தது. இதனைப் பார்த்த டீசல் இயக்குநர் சண்முகம் முத்துச்சாமி, “எமக்கு ஒதுக்கப்பட்டவை 100 + திரையரங்குகள் மட்டுமே. அதில், பல காலாவதியான திரையரங்குகள் அடங்கும் என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்’ எனத் தன் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பைசன் - நிஜ ஆசிரியருக்கு மரியாதை செலுத்திய மாரி செல்வராஜ்!
Summary
director shanmugam muthusamy diesel post
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
3 இடியட்ஸ் இரண்டாம் பாகம்: ஆமீர் கான்
வேட்டுவம் வெளியீடு எப்போது?

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!

மேன்சன் குத்து பாடல்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

