விரைவில் முடிகிறது ஹார்ட் பீட் - 2 தொடர்!

ஹார்ட் பீட் - 2 தொடர் முடிவடையவுள்ளது தொடர்பாக...
விரைவில் முடிகிறது ஹார்ட் பீட் - 2 தொடர்!
Published on
Updated on
1 min read

ஹார்ட் பீட் - 2 தொடர் விரைவில் முடிவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், தாய் - மகள் இருக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் ஆகியவற்றை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்படுகிறது.

ஹார்ட் பீட் முதல் பாகத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் ஹார்ட் பீட்- 2 வெப் தொடரில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா, பாடினி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இதனிடையே, கதையின்படி ரீனாவின் தந்தை விஜய்யின் அறிமுகமாகும் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், ரதியின் கடந்த கால வாழ்க்கை(ஃபிளாஷ் பேக்) தொடர்பான காட்சிகளும் காண்பிக்கப்பட்டு வருகிறது.

ரீனாவின் தந்தைதான் விஜய் என்ற உண்மை தெரியவருமா? அல்லது அடுத்த பாகத்தில் தெரியவருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில், ஹார்ட் பீட்- 2 வெப் தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் எடுக்கப்பட்டு, படப்படிப்பும் முடிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஹார்ட் பீட் - 2 தொடர் விரைவில் முடிவடையவுள்ளது. அடுத்த பாகம் இருக்குமா? என்பது குறித்த தகவல் பின்னர் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

It has been reported that the Heartbeat 2 series will end soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com