பிரதீப் ரங்கநாதன், இளையராஜா
பிரதீப் ரங்கநாதன், இளையராஜா

டியூட் மீது இளையராஜா வழக்கு தொடர திட்டம்?

இளையராஜா பாடல் பயன்பாடு குறித்து...
Published on

டியூட் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு இளையராஜா தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இப்படத்தில் ஒரு காட்சியில் நடிகை மமிதா பைஜூ இளையராஜா பாடல் ஒன்றிற்கு நடனமாடியிருந்தார். இக்காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், அந்த இளையராஜா பாடல் மீண்டும் கேட்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சோனி நிறுவனத்துக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்ற நீதிபதியிடம் ராஜா தரப்பு வழக்குரைஞர், ‘டியூட் திரைப்படத்திலும் இளையராஜாவின் 2 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளனர்.” என்றார்.

இதைக்கேட்ட நீதிபதி, “விருப்பமிருந்தால் இதற்குத் தனியாக ஒரு வழக்குத் தொடருங்கள்” எனக் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே, குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜா பாடல் பயன்படுத்தப்பட்டதற்காக மைத்ரி மூவிஸ் நிறுவனம் மேல் ராஜா வழக்கு தொடர்ந்த நிலையில், மீண்டும் டியூட் படத்திற்காக அதன் தயாரிப்பாளர் மைத்ரி மூவிஸ் மேல் இளையராஜா வழக்கு தொடரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Summary

ilaiyaraaja plan to file case against dude movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com