டியூட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த டியூட் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.
வெளியான முதல் 5 நாள்களிலேயே டியூட் ரூ. 95 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தீபாவளி வின்னர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து, ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றதுடன் ரூ. 100 கோடி வணிக படத்தையும் பிரதீப் கொடுத்திருப்பது ஆச்சரியத்தையே ஏற்படுத்தியுள்ளது.
காரணம், சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களே இவ்வளவு விரைவாக ரூ. 100 கோடியைப் பெறுவதில்லை என்பதால் பிரதீப் முன்னணி நட்சத்திர நடிகராகிவிட்டார் என்றே ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: தமிழில் ஆதிக்கம் செலுத்தும் பிறமொழி நடிகைகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.