
அண்டை மாநில நடிகைகள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
கலைக்கு மொழியில்லை. எனவே, கலைஞர்களுக்கும் இல்லை. ஆனால், சினிமாவில் சில எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் எப்போதும் நிலவிக்கொண்டிருப்பவை.
அப்படி, தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களிலோ அல்லது நாயகிகளிலோ பெரும்பாலும் தமிழ் நடிகைகளைப் பயன்படுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன.
அரிதாகவே, தமிழ்நாட்டில் பிறந்த நடிகைகள் நாயகிகளாக நீண்ட நாள்கள் தாக்குப்பிடித்தனர். கடந்த பத்தாண்டுகளைக் கணக்கில் வைத்தால், நடிகை சமந்தாவும் சாய் பல்லவியும் மட்டுமே பெரிய உயரத்திற்குச் சென்றார். த்ரிஷா நீண்ட காலம் நடித்தாலும் பான் இந்திய நடிகையாக பெரிய கவனத்தைப் பெறவில்லை. ஆனால், சாய் பல்லவிக்கு அந்த இடம் கிடைத்திருக்கிறது.
நயன்தாரா மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தார் என்றாலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ரஜினி, கமல், அஜித் ஆகியோர் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பதில்லை. விஜய்யும் நடிப்பதிலிருந்து விலகுவதாகக் கூறினார். இதனால், மூத்த நடிகைகள் இளம் கதாநாயகர்களுடன் இணைய வேண்டிய நெருக்கடியும் உருவாகியுள்ளது.
இதனால், தயாரிப்பாளர்களே இளம் கதாநாயகிகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக பூஜா ஹெக்டே, ருக்மணி வசந்த், மமிதா பைஜூ ஆகியோர் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.
காரணம், மமிதா தமிழில் அறிமுகமான டியூட் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்ததாக, சூர்யாவின் கருப்பு, விஜய்யின் ஜனநாயகன், தனுஷ் - 54 ஆகிய படங்களில் இணைந்துள்ளார்.
ஏஸ் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த ருக்மணிக்கு ரசிகர்கள் எண்ணிக்கை பயங்கரமாக அதிகரித்துள்ளது. மதராஸியிலும் கவனம் பெற்றார். காந்தாரா சாப்டர் 1 நடித்து பான் இந்திய நடிகையாகவும் ஆகிவிட்டார்.
ரெட்ரோ, ஜனநாயகன், கூலி என பெரிய படங்களில் பூஜாவின் பெயரே பரிந்துரைக்கப்படும் அளவிற்கு இவரும் தமிழின் முக்கிய நடிகையாகவே மாறிவிட்டார்.
மேலும், லோகா படத்தால் கல்யாணி பிரியதர்ஷனுக்கும் வாய்ப்புகள் செல்கிறதாம். சாய் பல்லவியும் பான் இந்திய சினிமாவில் கவனம் செலுத்துவதால் அண்டை மாநில நடிகைகளே தமிழின் முன்னணி நடிகைகளுக்கான இடத்தைப் பிடித்துள்ளனர்.
இதையும் படிக்க: சூப்பர் மாரி! பைசனைப் பாராட்டிய ரஜினி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.