
ஹாலிவுட் பிரபலங்கள் டாம் க்ரூஸ் மற்றும் அனா டி அர்மாஸ் ஆகியோர் பிரிவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாலிவுட்டில் முன்னணி நடிகராகத் திகழும் டாம் க்ரூஸ் (63) மற்றும் நடிகை அனா டி அர்மாஸ் (37) இருவரும் நீண்டகாலமாகவே காதலித்து வந்தனர்.
இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும், அதுவும் விண்வெளியிலோ அல்லது விமானத்திலிருந்து ஸ்கைடைவிங் செய்துகொண்டு திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
டாம் க்ரூஸ், ஏற்கெனவே 3 முறை விவாகரத்து பெற்றவர் என்பதும், அனா டி அர்மாஸ் ஒருமுறை விவாகரத்து பெற்றவர் என்பதால் இத்திருமணத்திலாவது இருவரும் நீண்ட காலம் இணைந்து வாழட்டும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஆனால், சினிமா டுவிஸ்ட் போல இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டாம் க்ரூஸ் மற்றும் அனா டி அர்மாஸுக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து மோதல்களால் இருவரும் பிரிய முடிவெடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், கல்யாணம் விண்வெளியிலோ விமானத்திலோ அல்ல கனவில்தானாம் என ரசிகர்கள் கிண்டலடித்தும் வருகின்றனர்.
இதையும் படிக்க: திண்ணையில் இருந்தவனா? கவனம் பெறும் சூரியின் பதிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.