actor dhanush
நடிகர் தனுஷ்

இட்லி கடை ஓடிடி தேதி இதுதானாம்!

இட்லி கடை ஓடிடி தேதி குறித்து...
Published on

நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ராயன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை கடந்த அக். 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இது ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல கருத்துகளும் கிடைத்தன. இதனால், இட்லி கடை படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

ஆனால், ரசிகர்களிடமிருந்து ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும் வணிக ரீதியாக இப்படம் சுமாரான வெற்றியைச் சந்தித்தது. காரணம், ரூ. 70 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் திரையரங்கு வெளியீட்டில் ரூ.65 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

ஓடிடி மற்றும் பிற உரிமைகள் நல்ல தொகைக்கு விற்கப்பட்டிருந்தால் மட்டுமே இட்லி கடை லாபகரமான படமாக இருந்திருக்கும்.

இந்த நிலையில், இட்லி கடை வருகிற அக். 31 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

reports suggests actor dhanush's idli kadai movie will release oct 31 on netflix

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com