
கெட்டி மேளம் தொடரில் இருந்து நடிகர் சிபு சூர்யன் விலகியதால், இவருக்கு பதிலாக நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கவுள்ளார்.
இதன்மூலம் நடிகை சாயா சிங்கிற்கு ஜோடியாக நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கவுள்ளார்.
வானத்தைப் போல, யாரடி நீ மோகினி, போன்ற பல வெற்றித் தொடர்களில் நடித்த ஸ்ரீகுமார் தற்போது கெட்டி மேளம் தொடரில் நடிக்கவுள்ளதால், பல புதிய திருப்பங்கள் உண்டாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 6.30 மணிக்கு கெட்டி மேளம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
லக்ஷ்மி நிவாசா என்ற கன்னட மொழித் தொடரின் மறு உருவாக்கமாக ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில், சாயா சிங், சிபு சூர்யன், விராட், செளந்தர்யா ரெட்டி, பிரவீனா, பொன்வண்ணன் உள்ளிட்டப் பலர் நடித்து வருகின்றனர்.
குடும்ப டிராமாவுடன் காதல் காட்சிகள் நிறைந்த இந்தத் தொடரில் சாயா சிங்கிற்கு ஜோடியாக சிபு சூர்யன் நடித்து வந்தார். ஆனால், கெட்டி மேளம் தொடரிலிருந்து சிபு சூர்யன் விலகியதால், அவருக்கு பதிலாக நடிகர் ஸ்ரீகுமார் நடிக்க உள்ளார்.
செளதர்யா ரெட்டிக்கு ஜோடியாக விராட் நடித்து வருவதால், சாயா சிங்கிற்கு பொருத்தமான ஜோடியாக ஸ்ரீகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.
2001 முதல் சின்ன திரையில் நடித்து வரும் ஸ்ரீகுமார் இதுவரை 25க்கும் அதிகமான தொடர்களில் நடித்துள்ளார்.
யாரடி நீ மோகினி, வானத்தைப் போல, தேவதையைக் கண்டேன், தாயுமானவன், தலையணைப் பூக்கள், நாணல், மலர்கள், ஆனந்தம் போன்றவை இவர் நடிப்பில் கவனம் பெற்றவை.
தற்போது கெட்டி மேளம் தொடரில் நடிக்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | சக்திவேல் தொடரின் முதல் பாகம் நிறைவு: இரண்டாம் பாகத்தில் நாயகன் மாற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.