
சக்திவேல் தொடரின் முதல் பாகம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் நாயகன் மாற்றப்பட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் - சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் சக்திவேல். இந்தத் தொடர் கடந்த 2023 டிசம்பர் 4 முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
முதல் பாகத்தில் பிரவீன் ஆதித்யா நாயகனாகவும், அஞ்சலி பாஸ்கர் நாயகியாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் ரேஷ்மா பிரசாத், மெர்வென் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கியப் பாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
ஹிந்தி மொழியில் ஒளிபரப்பான மன் கீ ஆவாஸ் பிரதிக்யா என்ற தொடரைத் தழுவி, இந்த தொடர் தமிழில் எடுக்கப்பட்டு வருகிறது.
தனது உரிமைகளுக்காகப் போராடும் நாயகி, ரெளடியை(நாயகன்) திருமணம் செய்துகொண்டு, நாயகி சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
சக்திவேல் முதல் பாகம் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில், நாயகன் சிறைக்கு செல்கிறார். இதோடு முதல் பாகம் நிறைவடைகிறது.
கடந்த அக். 21 ஆம் தேதி முதல் சக்திவேல் தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 7 ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு, ரெளடியாக இருந்த நாயகன் திருந்தி வாழ முயற்சி செய்கிறார். இதிலிருந்து சக்திவேல் தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிறது.
முதல் பாகத்தில் வேலன் பாத்திரத்தில் பிரவீன் ஆதித்யா நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் விக்ரம் ஸ்ரீ நடிக்கிறார். இவர் மகாநதி தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
அதேபோல, தேனம்மை பாத்திரத்தில் நடித்த விஜே சந்தியாவுக்குப் பதிலாக, சஹானா நடிக்கிறார்.
புதிய கதைக்களத்தில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரின் இரண்டாம் பாகம், விறுவிறுப்புடன் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.