ஆயிரத்தில் ஒருவன் - 2, புதுப்பேட்டை - 2 எப்போது? செல்வராகவன் அப்டேட்!

ஆயிரத்தில் ஒருவன் - 2, புதுப்பேட்டை - 2 படம் குறித்து செல்வராகவன் அப்டேட்.
இயக்குநர் செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன்
Published on
Updated on
1 min read

ஆயிரத்தில் ஒருவன் - 2, புதுப்பேட்டை - 2 படங்களுக்கான அப்டேட்டை இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு புதுப்பேட்டை வெளியானது. இந்தப் படத்தில் சோனியா அகர்வால், சிநேகா, அழகம் பெருமாள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

அதேபோல், இயக்குநர் செல்வராகவன் - கார்த்தி கூட்டணியில் பிரம்மாண்ட படமாக உருவானது ஆயிரத்தில் ஒருவன். இப்படம் வெளியானபோது கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வணிக ரீதியாகத் தோல்வியடைந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை செல்வராகவன் வெளியிட்டார். இதில், தனுஷ் நாயகனாகவும், கார்த்தி பிரதான பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆர்யன் பட விழாவில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் செல்வராகவன், “புதுக்கோட்டை - 2 படத்துக்கான கதையை 50 சதவிகிதம் எழுதியிருக்கிறேன், ஆயிரத்தில் ஒருவன் - 2 படத்தின் கதையையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி - 2 படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பைசனை பாராட்டிய வைகோ!

Summary

Director Selvaraghavan has announced an update for the films Aayirathil Oruvan - 2 and Pudupettai - 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com