நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமானவர் கென் கருணாஸ்.
இயக்குநர் வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.
அப்படத்தைத் தொடர்ந்து விடுதலை - 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே, தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி அனுபவம் பெற்றார்.
இந்த நிலையில், கென் கருணாஸ் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் வியாழக்கிழமை பூஜையுடன் தொடங்கியது.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஏற்கெனவே, இதுதொடர்பான அறிவிப்பு விடியோ வெளியாகி வைரலாகியிருந்தது. இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஸ்ரீதேவி, அனிஷ்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்தின் பூஜையில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் விஷால், கார்த்தி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
Ken Karunas movie shooting begins with pooja
இதையும் படிக்க : ஆங்கிலத்தில் வெளியாகும் காந்தாரா சாப்டர் 1!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

