

’லோகா சேப்டர் 1: சந்திரா’ படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான இந்தப் படம் கடந்த ஆக. 28 ஆம் தேதி வெளியானது.
கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் சூப்பர் வுமன் கதையாக உருவான இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கல்யாணி நடித்திருந்தார்.
சூப்பர் வுமனாக மாறும் சுவாரஸ்யமான கதை, ஆக்சன் காட்சிகள் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் இந்தியளவில் கவனம் பெற்று வசூலில் சாதனை படைத்தது.
உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த முதல் கேரள திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி மற்றும் வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.