நியூ பிகினிங்க்ஸ்! ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை!

ராம் சரண் - உபாசனா தம்பதி இரண்டாவது குழந்தைக்கு பெற்றோராகவிருப்பதாக மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளனர்
உபாசனா
உபாசனாஇன்ஸ்டா விடியோ
Published on
Updated on
1 min read

இந்த தீபாவளி பண்டிகை, டோலிவுட்டின் நட்சத்திர ஜோடியாகக் கருதப்படும் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

ஆர்ஆர்ஆர் நடிகர் ராம் சரண், தீபாவளி கொண்டாட்ட விடியோவை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்த அவரது ரசிகர்களுக்கும் இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்திருக்கிறது. காரணம் ராம் சரண் - உபாசனா தம்பதி தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்கவிருக்கிறார்கள் என்ற தகவலை விடியோவில் பதிவு செய்திருக்கிறார்.

அந்த விடியோவில், வீட்டு வாயிலில் தோரணம், பரிசுகள், கொண்டாட்டங்கள் பதிவாகியிருக்கிறது. பலரும் உபாசனாவுக்கு நலங்கு வைத்து வாழ்த்துகிறார்கள். இரட்டை கொண்டாட்டம், இரட்டை அன்பு, இரட்டை வாழ்த்துகள் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விடியோவின் நிறைவில் புதிய தொடக்கங்கள் என்று குழந்தையின் கால் தடம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதனைக் கேட்ட ராம் சரண் ரசிகர்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகிறார்கள்.

இந்த தம்பதிக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது. தற்போது இந்த தம்பதி இரண்டாவது குழந்தையை வரவேற்கத் தயாராகியிருக்கிறார்கள்.

ராம்சரண் புகழ்பெற்ற திரைப்பட நடிகர். ஆர்ஆர்ஆர், மகதீரா, ரங்கஸ்தலம் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றவர். அவரது மனைவி உபசனா ஒரு தொழில் அதிபர், கொடையாளர் மற்றும் சுகாதார சமூக ஆர்வலர், அப்பல்லோ மருத்துவமனைகளின் சிஎஸ்ஆர் பிரிவான அப்பல்லோ அறக்கட்டளையின் துணைத் தலைவராகவும், குடும்ப சுகாதாரத் திட்ட காப்பீட்டு டிபிஏ லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

இவர் அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டியின் பேத்தியாவார். இந்த மருத்துவமனை குழுமத்தின் மதிப்பு ரூ.77,000 கோடி என மதிப்பிடப்படுகிறது.

விடியோவில், இரட்டை அன்பு, இரட்டை துவக்கங்கள் என்றும், புதிய துவக்கங்கள் என்றும் பதிவிட்டிருப்பதால், இரட்டைக் குழந்தைகள் பிறக்கப் போகிறார்களா? என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

Summary

Ram Charan and Upasana share happy news of becoming parents to their second child

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com