

இயக்குநர் அட்லீ புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை வாங்கியுள்ளார்.
ஷாருக்கானின் ஜவான் பட வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கி வருகிறார் அட்லீ. படம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகிறது.
படத்தின் கதை முழுக் கற்பனை (fantacy) புனைகதையாக இருக்கும் எனத் தெரிகிறது.
படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்நிலையில், இயக்குநர் அட்லீ புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த காரின் விலை ரூ. 8 கோடி இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
அண்மையில் அட்லீ தனது குடும்பத்துடன் புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரில் விமான நிலையத்தில் வந்து இறங்கிய விடியோ வெளியாகி வைரானது. கோலிவுட்டில் இந்த காரை ஒருசிலரே வைத்துள்ளனர்.
ரஜினிகாந்த், விஜய், தனுஷ், இயக்குநர் சங்கர், ஹன்சிகா ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த காரை அட்லீ வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வச்சு செஞ்சுட்டாரு... டியூட் இயக்குநர் குறித்து பேசிய பா. ரஞ்சித்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.