பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஆதிரையின் பேச்சால் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி கடுப்பாகினார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரங்களில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறினர்.
நேற்று நடைபெற்ற வார இறுதிநாள் நிகழ்ச்சியில், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகள் பெற்ற ஆதிரை வெளியேற்றப்பட்டார்.
மேடைக்கு வந்த ஆதிரையிடம், நீங்கள் போட்டியை எங்கே தவறவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள்? என விஜய் சேதுபதி கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஆதிரை, ”தெரியவில்லை சார், நான் என்னுடைய போட்டியை சரியாகதான் விளையாடினேன் என நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் உடைந்தேன், அதெல்லாம் இருந்தாலும் மீண்டு வந்து சரியாகதான் விளையாடினேன்.
டாஸ்க் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் உள்ளே இருப்பதற்கு தகுதியானவள். நிறைய பேர் உள்ளே இருக்க தகுதியானவர்கள் அல்ல. அவங்க இருக்காங்க, நான் இல்லை என்றால், இவங்க புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்வேன். ” எனத் தெரிவித்தார்.
ஆதிரையின் பேச்சுக்கு எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், நன்றி மட்டும் தெரிவித்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார் விஜய் சேதுபதி.
வழக்கமாக வீட்டைவிட்டு வெளியேறுபவர்கள் விஜய் சேதுபதியுடன் நின்று உள்ளே இருக்கும் போட்டியாளர்களை சந்தித்து வாழ்த்து கூறுவது வழக்கம். ஆனால், ஆதிரை சந்திக்கவில்லை.
முன்னதாக, வீட்டைவிட்டு வெளியேறும்போதே, வீட்டில் உள்ளவர்கள் குறித்து கருத்து கூறிவிட்டு செல்லும்படி பிக் பாஸ் தெரிவித்தார்.
ஆகையால், மீண்டும் போட்டியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்க ஆதிரைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.