தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறு! யார் இவர்?

தமிழ், தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தன்வசம் வைத்திருக்கும் இவர் யார்?
தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறு! யார் இவர்?
Published on
Updated on
1 min read

தமிழ், தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தன்வசம் வைத்துள்ளவர்தான் இவர். ஆம், சமந்தாதான்!

இவர் உடற்பயிற்சி செய்வது போன்ற படம், வெளியிடப்பட்ட 2 மணிநேரத்துக்குள்ளாகவே 3.27 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றது.

இவர் தமிழில் நடிகர் விஜய்யுடன் கத்தி, மெர்சல் படங்களில் நடித்து பிரபலமானார். திரையில் விஜய்க்கு பொருத்தமான ஜோடி என்று ரசிகர்களால் பெரிதும் புகழப்பட்டவர், சமந்தா.

சமந்தா
சமந்தாInstagram | Samantha

நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்த சமந்தா, கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவருக்கும் விவாகரத்தும் ஏற்பட்டது.

இதனிடையே, சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடல்நிலைப் பிரச்னை காரணமாக சில ஆண்டுகளாக அவர் படங்களிலும் நடிக்கவில்லை.

இந்த நிலையில், இயக்குநர் ராஜ் நிடிமோருக்கும் சமந்தாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவுகின்றன.

இதனிடையே, சமீபத்திய பேட்டியொன்றில் சமந்தா பேசுகையில், ``என் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை நான் சந்தித்திருக்கிறேன். நான் துயரத்தில் இருந்தபோதும், அதனை சிலர் கொண்டாடினர். எனக்கு மயோசிடிஸ் நோய் வந்தபோதுகூட, என் காதுபடவே கேலி செய்தனர்.

என் விவாகரத்தை சிலர் விமரிசையாக கொண்டாடினர். இவற்றையெல்லாம் பார்த்தபோது, என் மனதில் வலித்தது. ஆனால், படிப்படியாக அதற்கெல்லாம் கவலைப்படுவதை நான் நிறுத்திக் கொண்டேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: 84 மார்க் போதாது… சிவகுமாருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com