

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் தொடரிலிருந்து நடிகை திவ்யா கணேசன் விலகியுள்ளார்.
அயலி இணையத் தொடரில் தமிழ்ச்செல்வி பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை அபி நட்சத்திரா.
தற்போது அபி நட்சத்திரா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் என்ற தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் -2 தொடரில் நாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பரத்குமார் நடிக்கிறார்.
மேலும், இத்தொடரில் மனோகர், கார்த்திக், ராஜலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அன்னம் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மாமன் மகனான கார்த்திக்கை(பரத் குமார்) காதலிக்கும் அத்தை மகளான அன்னம்(அபி நட்சத்திரா), ஆனால் கார்த்திக், ரம்யாவை (திவ்யா கணேசன்) விரும்புகிறார்.
சூழ்நிலை காரணமாக, கார்த்திக், அன்னத்தை திருமணம் செய்துகொள்கிறார். இதற்காக ரம்யா, கார்த்திக்கை பழிவாங்க நினைக்கிறார். இதிலிருந்து கார்த்திக்கை, அன்னம் எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதே கதை.
இந்த நிலையில், அன்னம் தொடரிலிருந்து திவ்யா கணேசன் விலகியுள்ளார். இந்தத் தொடரில் இருந்து திவ்யா விலகியுள்ளது, இந்தத் தொடரை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் விலகல் குறித்து திவ்யா கணேசன் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாக நிலையில், அவர் பிக் பாஸ் - 9 நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டின் மூலம் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல், இனி வரும் நாள்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.