

நடிகர் அஜித் திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு தன் குடும்பத்துடன் வருகை தந்து பெருமாளை சாமி தரிசனம் செய்தார்.
மேலும் ,நடிகர் அஜித்தின் ரசிகர்கள் ’தல தல’ என முழக்கமிட்ட நிலையில், செய்கை காட்டி அங்கிருந்து சென்றார்!
ஆந்திர மாநிலம் திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு திரைப்பட நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் சென்று வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தார்.
தற்போது, இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால், அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தொடா் மழையால் திருமலையில் பக்தர்கள் வருகை குறைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தர்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: காந்தாரா சாப்டர் 1 - ஓடிடி தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.