

பிக் பாஸ் சீசன் 9 வைல்ட் கார்டு போட்டியாளராக சின்ன திரை நடிகை திவ்யா கணேசன் பங்கேற்கவுள்ளார். பிக் பாஸ் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 10 ஆண்கள், 10 பெண்கள் இப்போட்டியில் பங்கேற்றிருந்த நிலையில், முதல் வாரம் தாமாகவே முன்வந்து நந்தினி வெளியேறினார்.
முதல் வார இறுதியில் இயக்குநர் பிரவீன் காந்தியும், இரண்டாவது வார இறுதியில் திருநங்கை அப்சராவும், மூன்றாவது வார இறுதியில் ஆதிரையும் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் வெளியேறினர்.
தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிட்ட நிலையில், வைல்ட் கார்டு மூலம் போட்டியாளர்கள் நுழையவுள்ளனர்.
திவ்யா கணேசன் யார்?
முதல் வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்கு சின்ன திரை நடிகை திவ்யா கணேசன் செல்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடரில் நடித்து கவனம் பெற்றவர்.
2015ஆம் ஆண்டு கேளடி கண்மணி தொடரில் நடித்ததன் மூலம் சின்ன திரையில் அறிமுகமான திவ்யா கணேசன், லட்சுமி வந்தாச்சு, சுமங்கலி, பாக்கியலட்சுமி, அன்னம் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
இதோடு மட்டுமின்றி சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும், கீ உள்ளிட்டப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால், இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஒரு மாதம் பிக் பாஸ் போட்டியை வெளியே இருந்து பார்த்துவிட்டுச் செல்வதால், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் குறித்து நன்கு அறிந்து செல்வதால், போட்டியில் பல திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | ராணுவப் பள்ளியாக மாறிய பிக் பாஸ் வீடு: அதிரடி காட்டும் இந்த வார கேப்டன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.