நடிகர் ரவி மோகனின் புரோ கோட் திரைப்படம் பெயர் சிக்கலைச் சந்தித்துள்ளது.
நடிகர் ரவி மோகன் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் புரோ கோட் (Bro code). இதில், ரவி மோகனுடன் எஸ். ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் திருமணமான ஆண்கள் சந்திக்கும் பிரச்னைகளை ஜாலியாக பேசலாம் எனத் தெரிகிறது.
இதன், அறிமுக புரோமோ விடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பிரபல மதுமான நிறுவனமான புரோ கோட் தில்லி உயர்நீதிமன்றத்தில் ரவி மோகனின் புரோ கோட் படத்தின் பெயருக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்துள்ளனர்.
காரணம், புரோ கோட் நிறுவனம் தமிழகத்தில் புதிய மதுபான வகைகளை அறிமுகம் செய்ய ரவி மோகனின் படத்தை புரமோஷனாக பயன்படுத்த அணுகியதாகவும் அவர் மறுத்ததால் இந்நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ரவி மோகன் தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், பெயரையும் திரைக்கதையும் முறையாக பதிவு செய்திருப்பதால் ரவி மோகன் படத்தின் பெயரை வைத்துக்கொள்ள நீதிபதி ஒப்பதல் அளித்திருக்கிறார். இதன், மேல்முறையீடு விசாரணை நவம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: லியோவைச் சந்திக்கும் பென்ஸ்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.