கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நீங்கள்தான் மாரி அந்த பைசன்: மணிரத்னம்

மாரி செல்வராஜைப் பாராட்டிய மணிரத்னம்...

News image

மாரி செல்வராஜ், மணிரத்னம்

Updated On :29 அக்டோபர் 2025, 6:21 am

இயக்குநர் மணிரத்னம் பைசன் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.

உலகளவில் ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் தெலுங்கில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமன்றி திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் மணிரத்னம், “பைசன் திரைப்படத்தைப் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்கள்தான் அந்த பைசன் மாரி. உங்கள் பணியை நினைத்து பெருமையடைகிறேன். உங்கள் குரல் முக்கியமானது. தொடர்ந்து செல்லுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு மாரி செல்வராஜ், “பரியேறும்பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையையும் பார்த்து கவனித்து பாராட்டி என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வாத்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார்” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

director maniratnam appreciates mari selvaraj and bison movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.